மாற்றங்கள் ஒன்றே மாறாதது

ஊக்கம் கொடுப்பவன்

ஊக்கம் கொடுப்பவன்
எனது வலைத்தளத்திற்கு வந்தமைக்கு நன்றி

Followers

எனது வலைத்தளங்களை கீழே கொடுத்துள்ளேன் அதைப் பார்க்க கிளிக் செய்யவும்

Monday, November 17, 2014

ஸ்டீவ் ஜாப்ஸின் மூன்று கதைகள்


ஆப்பிள்(APPLE),பிக்ஸார்(PIXAR),நெக்ஸ்ட்(NEXT) போன்றவற்றை நிறுவிய 
ஸ்டீவ் ஜாப்ஸ் ஸ்டான்ஃபோர்ட்(Stanford) பல்கலைக்கழகத்தில் மாணவ மாணவிகள் மத்தியில் பேசியதை நான் புரிந்து கொண்ட அளவு மொழிபெயர்த்துள்ளேன் .ஸ்டீவ் ஜாப்ஸ் யார் என்று தெரியாவிட்டால் http://en.wikipedia.org/wiki/Steve_Jobs இந்த முகவரியைக் கிளிக் செய்யவும்.




தன் பேச்சைத் தொடங்குகிறார் .அவர் கூறியதாவது "நான் உங்களுக்கு மூன்று கதைகளை மட்டும் சொல்ல ஆசைப்படுகிறேன் ."
என்கிறார். அந்த மூன்றுகதைகள்
  1.புள்ளிகளை இணைத்தல் (connecting the dots )
  2.அன்பும்,வாழ்வும்(love and life)
  3.இறப்பு(dead)

புள்ளிகளை இணைத்தல்
                        இந்த கதையில் தான் 17 ஆண்டுகள் படித்த பின்பு
கல்லூரியில் சேர்ந்ததாகவும் பின்பு தனக்கு தான் படிக்கும் படிப்பில் ஆர்வமில்லாததால் தன் தாய் தந்தை நிலைமையை நினைத்து (தனது தாய் கல்லூரிக்குச் சென்றதில்லை,தந்தை பள்ளி படிப்பு மட்டும் தான் முடித்திருக்கிறார்கள்)ஆர்வமில்லாத படிப்பு ஒன்றை பொழுதுபோக்கிற்காக இவ்வளவு பணம் தனது பெற்றோர் செலவழித்து தன்னைப் படிக்க வைக்க வேண்டுமா என எண்ணுகிறார்.அன்று தான் எடுத்த முடிவுக்காக பலர் தன்னை இகழ்ந்திருக்கலாம் ஆனால் இன்று அதுதான் தான் தனது வாழ்க்கையில் எடுத்த சிறந்த முடிவுகளுள் ஒன்றாகி விட்டது என்கிறார். 
                     
                இதனால் அவர் ஒவ்வொருவர் வாழ்வில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொரு புள்ளி எனக் குறிப்பிடுகின்றார்.அவர் வாழ்வை பின்னோக்கிப் பார்க்க வேண்டும் என்கிறார்.ஒவ்வொரு புள்ளியையும் உங்கள் வாழ்வில் பெற்ற வெற்றி புள்ளிகளுடன் இணைத்துப் பார்க்க வேண்டும் அது உங்கள் வாழ்வில் புதிய வெற்றிப் பாதையை உருவாக்கித் தரும் என்கிறார்.

அன்பும்,வாழ்வும் 
                                       தான் அதிர்ஷ்டசாலி என்றும், தான் தனது வாழ்வில் மிகக் குறைவான காலத்தில் தான் என்ன செய்ய விரும்புகிறேன் என்பதைக் கண்டறிந்ததாகக் கூறுகின்றார்.
                                     தான் தனது விருப்பத்தின் படி நடந்ததால்தான் தன்னால் சாதிக்க முடிந்ததாக கூறுகின்றார்.தான் முதலில் குறைவான வேகத்தில் சாதித்ததாகவும் பின்பு 30 வயதிற்கு மேல் நெருப்புபோல் கிளம்பியதாகவும் கூறுகின்றார்.
                             எப்போதும் ஒருவர் ஒன்றை கண்டுபிடித்து விட்டால் அந்த பொருளைப் பற்றிக் கவலைப் படாமல் அதில் வேலை மட்டும் பார்த்துக் கொண்டிருக்காமல் அதை வேறு விதமாக முன்னேற்ற முடியுமா என்று தான் சிந்தித்ததாகக் கூறுகின்றார்.  

இறப்பு
               உங்கள் வாழ்க்கையில் இன்றுதான் கடைசி நாள் என சிந்தித்துக் கொண்டு உங்கள் முன்னேற்றத்திற்கான விஷயங்களைச் செய்யுங்கள் என்கின்றார்.உங்களது வாழ்க்கை மிகவும் குறைவானதே!எனவே சாதராண மனிதர்கள் ஆசைப்படும் அற்ப ஆசைகளுக்கு ஆசைப் படாதீர்கள்.உங்கள் முன்னேற்றத்திற்கானவற்றை மட்டும் தொடர்ந்து செய்யுங்கள் என்கின்றார்.உங்கள் உள்ளுணர்வு சொல்வதைக் கேளுங்கள் உலகம் சொல்வதைப் பற்றி கவலைப்படாதீர்கள்.
                                               நீங்கள் உண்மையாக நேசித்த துறையில் தோல்வி என்றால் மீண்டும் முயன்று சாதிக்க வேண்டும் என்கின்றார்.கடைசி தனக்கு பிடித்த வாக்கியத்தை சொல்லி முடிக்கின்றார்.முட்டாளாக இரு!பசியுடன் இரு!(அறிவுப் பசியுடன்).முட்டாளாக இரு!பசியுடன் இரு!(அறிவுப் பசியுடன்)(stay foolish! stay hungry! stay foolish! stay hungry!)
எனக் கூறி தனது உரையை முடிக்கின்றார்.

நல்ல உரையை you tube வலைத்தளத்தில் Stanford பல்கலைக் கழகத்திற்கு நன்றி
you tube வலைத்தளத்திற்கு நன்றி!
ஸ்டீவ் ஜாப்ஸ் பேசிய உரையை ஆங்கிலத்தில் கேட்க




No comments:

Post a Comment

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன

தொடர்புடைய பதிவுகள்

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out