மாற்றங்கள் ஒன்றே மாறாதது

ஊக்கம் கொடுப்பவன்

ஊக்கம் கொடுப்பவன்
எனது வலைத்தளத்திற்கு வந்தமைக்கு நன்றி

Followers

எனது வலைத்தளங்களை கீழே கொடுத்துள்ளேன் அதைப் பார்க்க கிளிக் செய்யவும்

Wednesday, August 10, 2016

வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்



        நண்பர்களுடன் வழக்கம் போல வகுப்பு முடிந்தவுடன் அன்று நடந்த்தை எல்லாம் பேசிவிட்டு ,பேருந்து நிறுத்த்திற்குச் சென்றேன்.போன் ஒன்று தவறி தண்ணீரில் விழுந்துவிட்டது.அதை சரிசெய்ய ஒரு கடைக்குச் சென்றேன்.அந்தக் கடைக்காரர் ஒரு மணிநேரம் ஆகும் என்றார்.சரி இருந்து வாங்கிக் கொண்டு செல்வோம் என்று நின்றால் 5 நிமிட்த்திற்கு 5 பேர் 20,30,50,100,300,500,1000 என்று ரீசார்ஜ் ,ரேட் கட்டர் என்று போய் கொண்டே இருந்தது.


           ஒவ்வொரு சிம் கார்டுக்கும் ஒரு நோட் வைத்து அத்தனை சிம்களுக்கும் மாறி மாறி ஒவ்வொரு போனில் இருந்து ரீசார்ஜ் செய்கிறார்,சற்று கவனக்குறைவு ஏற்பட்டாலும் வேறு ஒரு எண்ணிற்கு அத்தனை ரூபாயும் சென்றுவிடும்.இது போக ஸ்பேர் பார்ட்ஸ் விற்பனை செய்து கொண்டு ,செல்போன் சர்வீஸ் செய்து கொண்டு இருக்கும் ஒருவரைப் பார்த்தேன்.

             வெறும் பணம் மட்டுமே சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு எத்தனை நல்ல வழிகள் உள்ளன.பணம் சம்பாதிப்பதைத் தவிர நாம் செய்யும் தொழில் நமக்கு எதையாவது கற்றுக் கொடுக்க வேண்டும் அல்லது திருப்தி அளிக்க வேண்டும் அல்லது நாம் எந்த நோக்கத்திற்காக ஒரு வேலை அல்லது தொழில் சேர்ந்தோமோ அதை மட்டுமே நம்பி வேலை பார்த்தால் பணம் தானக வரும்.மாறாக பணத்தை மட்டுமே எண்ணி வேலைக்கு சேர்ந்தால் நம் தகுதியும் போய்விடும்,வேலையைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் பணம் வேண்டும்.

இதைத் தான் ராபின் சர்மா STAY FOR PURPOSE NOT MONEY  என்று குறிப்பிடுவார்.

2 comments:

  1. அருமையான வழிகாட்டல்

    குழுப் (வாட்ஸ் அப், வைபர்) பகிர்வு, பதிவர்களுக்குப் பயனுள்ளதா?
    http://www.ypvnpubs.com/2016/08/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. ஊக்கம் கொடுப்பவனுக்கு ஊக்கம் கொடுத்ததிற்கு நன்றி.

      Delete

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன

தொடர்புடைய பதிவுகள்

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out