மாற்றங்கள் ஒன்றே மாறாதது

ஊக்கம் கொடுப்பவன்

ஊக்கம் கொடுப்பவன்
எனது வலைத்தளத்திற்கு வந்தமைக்கு நன்றி

Followers

எனது வலைத்தளங்களை கீழே கொடுத்துள்ளேன் அதைப் பார்க்க கிளிக் செய்யவும்

Wednesday, November 5, 2014

முடிவு எடுக்கும் திறனே முன்னேற்றம்



"பழைய கதை,பழைய தலைமுறையினருக்குத் தெரிந்த கதை .இன்றைய வாழ்க்கைக்குத் தேவையான கதை"ஆமையும் முயலும்".இந்தக் கதை வேகத்தைப் பற்றி குறிப்பிடவில்லை,விவேகத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறது.போட்டியிலோ வாழ்விலோ முடிவு எடுக்கும் திறன் மிக முக்கியம்".தன்னுடைய பலம் எது பலவீனம் எது என்று புரிந்தவரே-புரிந்தால் மட்டும் போதாது அதற்கேற்பச் செயல்படுபவரே வாழ்க்கையில் முழுமை பெற முடியும்.



              முடிவு எடுக்கும் திறன் இல்லாதவர் அல்லது அடுத்தவர் பேச்சைக் கேட்டு முடிவு எடுப்பவர்.தொலை நோக்குப் பார்வை இன்றி முடிவு எடுப்பவர்கள்.தங்களது முடிவுகளுக்கு ஏற்பவே எதிர்காலத்தைச் சந்திக்க நேரிடுகிறது..

         "வாழ்க்கையை அதன் போக்கிற்கு விடுவதை விட நன்கு யோசித்து,தெளிந்த முடிவுகளை முன்கூட்டியே எடுப்பது மிக முக்கியம்".

          வெள்ளம் வறட்சி இரண்டையும் நதிகள் சந்திக்கின்றன.ஆனால் மனிதன் கரை எடுக்கிறான்.அணை கட்டுகிறான் ஏன்?

         சுய அறிவு அதிகம் இருந்தால் போதும் நிறுவனங்கள் அவனுக்கு மென்மேலும் பயிற்சி கொடுக்கின்றது.
ஏன்?திட்டம் இடுதலிலும் அதற்கான முடிவு எடுப்பதிலும்தான் மனிதரின் முன்னேற்றம் இருக்கிறது."

      "ஓடும் குதிரைக்குக் கண்கள் ஓரப் பார்வை மறைப்பது போல கட்டுவது எதற்கு?நேர்பாதை காணவே.படிக்கும் காலத்தில் அப்படித்தான் இருக்க வேண்டும்.பலமுறை யோசிக்கலாம்.ஆனால் ஒரு முறை முடிவு எடுத்தபின் அந்த இலட்சிய வெறி மனதில் உடம்பில் ஊற வேண்டும்."

  "சதுரங்கத்தில் காய்களை நகர்த்தும் போது எதிரியால் காய் எப்போது எங்கு வரும் என்று துல்லியமாக கணிக்கின்ற அறிவாற்றல் வேண்டும்.அந்தக் கணிப்பின் அடிப்படையில்தான் காய்களை நகர்த்த வேண்டும்.இந்த கணிப்பிற்கும் தொலைனோக்கு திட்டம் அவசியம்.முடிவு எடுத்தபின் கலங்கக் கூடாது.வெற்றி பெறுவோம் என்பது வெறி."எண்ணிய எண்ணியாங்கு எய்தும்"
சரியான நேரத்தில் சரியான வழியில் சரியான முடிவுகளை எடுத்துச் செயல்படுத்தினால் நிறைவான முன்னேற்றம் நிச்சயம்!"முடிவு எடுக்கும் திறனே முன்னேற்றம்".
           
                                                                                 -நன்றி 'அக்னிச் சிறகுகள்'

நன்றி:தொகுப்பாசிரியர் கி.பார்த்த சாரதி(அப்துல் கலாமின் அரிய தத்துவங்கள்)

1 comment:

  1. சிறந்த வழிகாட்டல்
    தொடருங்கள்

    ReplyDelete

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன

தொடர்புடைய பதிவுகள்

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out