மாற்றங்கள் ஒன்றே மாறாதது

ஊக்கம் கொடுப்பவன்

ஊக்கம் கொடுப்பவன்
எனது வலைத்தளத்திற்கு வந்தமைக்கு நன்றி

Followers

எனது வலைத்தளங்களை கீழே கொடுத்துள்ளேன் அதைப் பார்க்க கிளிக் செய்யவும்

Friday, July 3, 2015

முயன்றால் முடியும்

EAT THAT FROG என்ற நூலின் விமர்சனம் தமிழ் ஹிந்துவில் வந்தது

 இரண்டு தவளைகள் இருந்தால் அதில் மிகவும் மோசமான அருவருப்பான தவளையை முதலில் விழுங்குவது அறிவுடைமை.



ஒரு சின்ன காகிதத்தில் செய்ய வேண்டிய வேலைகளை பற்றியும் முடிக்க வேண்டிய கால அவகாசம் பற்றியும்,விளைவுகளின் நிலைமை பற்றியும் எழுதி வைத்திருப்பார்.

முக்கியமான விளைவுகளை ஏற்படுத்தும் செயல்களுக்கு மட்டுமே அதிக முன்னுரிமை அளிப்பார்.

மணி எப்போதும் வேலையின் மதிப்பையும் முக்கியத்துவத்தையும் கணக்கிட்டு அதன் விளைவுகளை ஆராய்ந்து கையில் உள்ள பணிகளையும் வரிசைப்படுத்துவார்.

மிக முக்கியமான மூன்று .மிக தேவையில்லாத மூன்று,எதிர்காலத்தில் தேவையான மூன்று என்றென்றைக்கும் தேவையான மூன்று  என்று கைவசம் இருக்கும் செயல்களையும் ,பணிகளையும் வரிசைப்படுத்துவார்.முடிவில் எதிர்காலத்தையும்,தேவையானதையும் செய்து முடிப்பார்.

தொடங்கும் முன் முழுமையாக தயார் செய்து கொள்ளுதல்.

ஒரே முறையில் செய்து முடிக்க கூடிய பெரிய கடினமான பணிகளைத் தேர்ந்தெடுத்தல்.

திறமையான சிறப்பான செயல்பாடுகளை முதலில் முடித்து நம்பிக்கையையும், வெற்றியையும் வசப்படுத்த வேண்டும்.

முக்கியமான தடைகளை கண்டறிந்து அவைகளை நீக்கும் பொழுது வெற்றி வேகமாக வந்து சேரும்.வேண்டாதவைகள் விலகி போகும்.

மற்றவர்கள் செய்வார்கள் என்பதை தவிர்த்து என்னால் எதை அதிகபட்சம் செய்ய முடியும் என்று முனைந்து செய்தால் விளைவு வெற்றியைத்தவிர வேறொன்றும் இல்லை.

சுய ஆற்றலை சரியான நேரத்தில் சரியான முறையில் வெளிப்படுத்த வேண்டும்.நாள் முழுவதும் பணிகளை இழுத்துக்கொண்டே இருப்பதை விட காலை ,மதியம் ,மாலை இந்த நேரங்களில் விரைவாக செயல்படும் நேரத்தை அறிந்து செயல் திறமையை வெளிப்படுத்த வேண்டும்.

ஆக்கப்பூர்வமான நம்பிக்கைகளை வளர்த்துக் கொண்டு ஒவ்வொரு முறை இலக்குகளை அடையும்
முன்பும் தன்னைத்தானே தட்டிக் கொடுத்து,முடித்ததை எண்ணி மகிழ்ந்து அடுத்ததை நோக்கி செல்லுதல் வேண்டும். 

தொழில்நுட்ப ஆக்கப்பூர்வங்களை முறையாக பயன்படுத்த வேண்டுமே தவிர அவற்றின் ஆளுகைக்கு நாம் ஆட்படக் கூடாது.(உதாரணமாக கைப்பேசி,கணினி,தொலைக்காட்சி,செய்திகள் மற்றும் பிற).

பகுத்து சிறு சிறு பாகங்களாக பெரிய கடினமான வேலைகளை மாற்றிக் கொள்வது உற்சாகத்தையும்,நிறைவையும் சேர்த்து தரும்.

ஒரு நாளிலோ ஒரு வாரத்திலோ எப்பொழுதும் அதிக நேரம் கிடைப்பதாக உணர்கின்றோமோ,அந்த நேரத்தில் முக்கியமான ,கடினமான வேலைகளை முடிக்க வேண்டும் .

வேகமாகவும்,நல்ல முறையில் பணிகளை செய்து முடிப்பவர்களை எல்லாரும் பாராட்டுவர்.

அதிகபட்ச செயல் திறனுக்கும் ,நிறைந்த உற்பத்தி திறனுக்கும் ஒவ்வொரு பணியையும் தனித்தனியாக பிரித்து முழு கவன்ம் செலுத்தி 100% அவைகளை முடிக்கும் வரை ஒன்றியிருப்பது வெற்றியை கொண்டு வந்து சேர்க்கும்.

இலக்குகளை வேறுபடுத்திக் காட்டும் பணிகளை நேர்க்கொண்டு முடிக்கப் பாருங்கள்.

1 comment:

  1. சிறந்த வழிகாட்டல்
    தங்கள் முயற்சி தொடர
    வாழ்த்துகள்

    ReplyDelete

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன

தொடர்புடைய பதிவுகள்

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out