மாற்றங்கள் ஒன்றே மாறாதது

ஊக்கம் கொடுப்பவன்

ஊக்கம் கொடுப்பவன்
எனது வலைத்தளத்திற்கு வந்தமைக்கு நன்றி

Followers

எனது வலைத்தளங்களை கீழே கொடுத்துள்ளேன் அதைப் பார்க்க கிளிக் செய்யவும்

Monday, July 27, 2015

அப்துல்கலாம் ஆசிரியரா?விஞ்ஞானியா?குடியரசுத் தலைவரா?



                                அப்துல்கலாம் எவ்வளவு கஷ்டப்பட்டு எவ்வளவு சிறமத்திலும் மேலே வந்தார் என்பது நமக்குத் தெரியும்,வயது 84 இன்றளவும் மாணவர்கள்
இளைஞர்கள் மேல் அவ்வளவு பிரியம் அவருக்கு,அவர் செய்த சாதனைகள் ஏவுகணை ஏவியது,




அமெரிக்க அழைத்தும் தனது நாடுதான் பெரிது என்று செல்லாதிருந்தது,இன்று எத்தனையோ பேர் பணம்,வசதிக்காக அயல் நாடுகளுக்கு செல்கின்றனர் ஆனால் அவர் செல்லவில்லை.அமெரிக்காவிற்குத் தெரியாமல் ஒரு வினாடியில் அணுகுண்டு சோதனை நடத்தியது.இது எல்லாவற்றையும் விட இன்று எத்தனையோ பேர் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று அலங்காரம் பண்ணுபவர்கள் எல்லாம் அப்துல்கலாமின் எளிமையை பற்றி பேசுகின்றனர்.அப்துல்கலாம் சொன்னது "உன் அழகைப் பற்றி கனவு காணாதே அது உன் வாழ்க்கையை பாழாக்கும்,உன் கடமையை பற்றி கனவு காணு அது உன் வாழ்க்கையை அழகாக்கும்" என்று கூறினார். அப்படிபட்டவர் எளிமையாக இல்லாமல் 8 இலட்சம் ரூபாய்க்கும் ,10 இலட்சம் ரூபாய்க்கும் ஆடை அணிந்துகொண்டா இருப்பார்.மதுரை வந்திருந்தபோது கண் அறுவை சிகிச்சைக்காக இலவச அறுவைசிகிச்சை பிரிபில் அறுவை சிகிச்சை செய்தவர் இன்று எத்தனை பேர் தகுதி இல்லாதவர்கள் ஏ.சி கார்களில் செல்கின்றனர் என்பது நமக்குத் தெரியும்.

அப்துல்கலாம் மாற்றுத் திறனாளி மாணவி ஒருத்தி கஷ்டப்படுவதை கண்டு எடையில்லா கால்பொருத்தும் இயந்திரத்தை கண்டு பிடித்தார்,எல்லாவற்றையும் விட மாணவர்களை அவர் சந்தித்து கொண்டே இருந்தார்.அவர்களை ஊக்கப்படுத்தினார். அன்றைய குடியரசு தலைவர் இராதாகிருஷ்ணன் தான் தனது வாழ்நாளில் ஓட்டுப்போட்டது கிடையாது என்றார்.ஆனால் அப்துல்கலாமோ வரிசையில் நின்று ஓட்டுப் போட்டார்.

இராதகிருஷ்ணன் ஆசிரியருக்கு சொன்ன விளக்கம் "A good teacher teaches,better teacher narrates,a best teacher explains,an excellent teacher motivates".ஒரு அருமையான வர்ணிக்கமுடியாத அளவுக்கு மாணவர்களை ஊக்கமூட்டிய ஒரு ஆசிரியர் அப்துல்கலாம்.அப்துல்கலாம் விஞ்ஞானியா?குடியரசுத் தலைவரா?ஆசிரியரா? இதில் அவருக்கு பிடித்தமான மாணவர்களை ஊக்குவிப்பதே ஒரு அருமையான ஆசிரியரின் பணி என்பதை நமக்கு விளக்குகிறது,அவர் 10 உறுதிமொழிகளை நமக்க்குத் தந்தார் அதை கடைபிடிக்கச் சொன்னார்.என்னை பொறுத்தமட்டில் அவர் மற்ற தலைவர்கள் மாதிரி ஒரு தபால்தலையில் வந்தாலோ நாணயத்தில் வந்தாலோ அவர் பத்தோடு பதினொன்றாகி விடுவார் அவர் ஒவ்வொரு இளைஞனின் மனதிலும் நிறைந்திருக்கிறார்.

அவர் 2020 என்று இந்தியாவை யோசித்தார்.ஆனால் இன்றைய இளைஞர்களாகிய நாம் சமூக வலைத்தளங்களில் அவருக்கு இரங்கல் தெரிவித்து இன்றும் ஆகப்போவதில்லை அதர்கு மாற்றாக அவரது வாழ்க்கை நமது மனதில் ஒரு ஊற்றாக சுரந்தாலே அதுவே நாம் அவருக்கு செலுத்தும் அஞ்சலி.அவரது பிறந்தநாளை எழுச்சிபெறும் இளைஞர்கள் நாளாக கொண்டாட வேண்டும்.இளைஞர்கள் தினம் என வெறும் ஆன்மிக செய்திகளை மட்டுமே முன்னிருத்திய தலைவர் அல்ல அவர் மாற்றாக ஒவ்வொரு கிராமமும் முன்னேற வேண்டும் கிராமத்து இளைஞர்கள் முன்னேற வேண்டும் என்று ஆசைப்பட்டவர்.வாழ்க அவரது புகழ்.அவர் எந்த மதத்தின் தலைவரும் அல்ல இளைஞர்களின் தலைவர்.ஆனால் இன்றைய இளைஞர்களோ தொழில் நுட்பத்தின் கையில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை . வாழ்க அவரது புகழ் எல்லாவற்றையும் விட ஒரு தமிழன் இவ்வளவு சாதித்திருக்கிறார் என்பதே நாம் பெருமை பட வேண்டிய வொன்று.ஆனால் அந்த தமிழன் குடியரசு தலைவர் ஆனால்தான் இந்தியாமுழுக்க தெரிந்தாரா என்றால் இல்லை.மாணவர்களை ஊக்குவித்ததாலே இன்றளவும் அவர் மாணவர்கள் மனதில் நிற்கிறார். 

No comments:

Post a Comment

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன

தொடர்புடைய பதிவுகள்

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out